சிறுகதை நிறை

 வீட்டுக்குச் சந்தாவாக அனுப்பப்படுகிறது என்றால் அதை நீங்கள் படிக்கலாமே- அதன் அபூர்வமான கதைகளுக்காக கவிதைகளுக்காக.


'வீட்டிற்கு வருகிறதுதான். ஆனால் நான் படிக்கிறதில்லை. புரட்டுவதுகூட கிடையாது. அது வருகிறது தபாலில் என்பதெல்லாம் என் மாதமிருமுறை ஞாபகத்தில் இப்போது இல்லை'. ஜோதி கேட்டதற்கு நான் இப்படித்தான் பதில் சொல்ல முடிந்தது.

அந்த புத்தகத்தின் பழைய இதழ்களில் நிறைய விஷயங்களை எப்போதும் மறப்பதற்கில்லை. அது காட்டுகின்ற சந்தோசமான முகங்கள் செழுமையாயும் ஆரோக்கியமும் மிக்க அந்த தேசத்து ஆண் பெண்களின் புன்னகைகள் அவர்களின் பாரம்பரிய உடையிலும் முடி அலங்காரத்துடனும் ஆடுகிற நடனங்கள். அழுத்தமும் திறமையும் ஆக அச்சிடப்பட்டு இருக்கிற அவர்களின் நீர்வண்ண தைல வண்ண ஓவியங்கள் மரச் செதுக்கல்கள்.பீங்கான் வேலைப்பாடுகள். எல்லாவற்றிலும் கூடுதலாக அதிகம் ரசிக்கிற அவர்களின் கதைகளின் மனுஷர்கள்.

நீங்கள் படிக்கவில்லை என்றால் அது யாரிடம் போகும்? வீட்டில் வேறு யாராவது படிப்பார்களா அல்லது மாதாமாதம் பேப்பர்காரனுக்குத்தானா? மேலும் ஜோதியை கேட்டதில் ஒரு உண்மை இருந்தது. அது பேப்பர்காரன் இடம் தான் மாதாமாதம் போகிறது என்றாலும் தாத்தாவால் படிக்கப்பட்ட பிறகுதான். தாத்தாவுக்கு அதில் படிப்பதற்கு விஷயங்கள் இருக்கிறது என்றால் யாரும் நம்புவதற்கு யோசிப்பது இயற்கை. ஆனாலும் தாத்தா ஒரு வரி விடாமல் படித்து வந்தார் அவருக்கு பார்வை இருக்கிறவரைக்கும்.


பார்வை போய்விடவில்லை குறைந்துவிட்டது. வீட்டு ஆள்களின் அடையாளங்கள் வீட்டு ஆள்களின் நிழல்களின் அடையாளமான பிறகு படிக்கிற முயற்சிக்கு இடமில்லை. சதா நீர் கசிந்து கொண்டிருக்கிற கண்களை விரலில் வேட்டி முனையைச் சுற்றி துடைத்துக் கொண்டே பேசுகிற சுபாவம் தாத்தாவுக்கு முன்னமேயே உண்டு. ஏதாவது ஒரு விஷயத்தை கதை மாதிரி சொல்லிக்கொண்டு இடையில் அப்படி கண்களையும் மை போடுகிற மாதிரி கீழ் ஓரமாக துடைத்துக் கொண்டு கடைசியில் ஒரு சிரிப்பும் கரகரவென்று சிரிக்கிற முகமும் கழண்று போய்விட்டது. தாத்தாவை விட்டு இலை உதிர்கிறதுபோல தாத்தாவின் முகத்தில் இருந்த களை இந்தப் பார்வை குறைவுக்கு அப்புறம் உதிர்ந்து போய் விட்டது என்றே சொல்ல வேண்டும்.


போஸ்ட்மேன் களுக்கு அனேக வீட்டு பட்டாசல்கள் தெரிந்திருக்கும். தார்சா தெரிந்திருக்கும். கதவுடைய ஜாடை கூட தெரிந்திருக்கும். ஆனால் உள்ளே இந்த வீட்டுக்குள் இப்படி ஒரு அடக்கமான கட்டு இருப்பது தெரிந்திருக்காது.

போஸ்ட்மேன் களுக்கு காகிதங்களை வீசி விட்டுப் போகிற ஒரு சந்தர்ப்பத்தை தாத்தாவின் நடமாட்டம் இருக்கிறவரை கொடுத்தது இருக்கமாட்டார். காலையில் சாப்பிட்டுவிட்டு தொழுவத்தை மறுபடி பார்த்து சாணியை வழித்துப் போட்டு விட்டு ஒரு கை வைக்கோலை அள்ளி போட்டுவிட்டு வாசல் கல்லில் போய் உட்கார்ந்தால் போஸ்ட்மேன் வந்தபிறகுதான் தாத்தா வீட்டுக்கு வருவார். இந்த வீட்டு வாசலுக்கு ஒரு மேடை மாதிரி அந்தக்கல் திண்டு போடப்பட்டிருக்கிறது. வீட்டுக்கு வீடு ஒரு கல் பெஞ்சும் தார்சாவுமாக வீடு கட்டி போட்டது மட்டுமல்லாமல் வாசல் முழுவதையும் பார்க்கிற மாதிரி இப்படி ஒரு கல் பெஞ்சு போட்ட தோரணை இந்த வாசலில் தான் உண்டு தெரு முழுவதிலும்.

தாத்தா வெறுமனே உட்கார்ந்து இருக்க மாட்டார்.

கண்ணாடிக் கூடு பேப்பர் புகையிலை தடை எல்லாம் பக்கத்திலேயே இருக்கும். பல்லிடுக்கில் ஊறிப்போய் இருக்கிற பாக்கு துண்டின் துவர்ப்பைத் துழாவித் துழாவி எடுத்துக்கொண்டே தாத்தா வாசலில் உள்ள பெண்களிடம் பேசுகிற பிரியம் அருமையாக இருக்கும்

எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று முறை தான். சொந்தம் தான். அதனால் பேச்சு தடங்கல் இல்லாமல் இருக்கும். வீட்டு ஆம்பிளைகள் வெளியில் ஜோலிக்கு போன பிறகு பெண்கள் வாசலுக்கு வரத்தான் வேண்டியதிருக்கிறது. கல் பெஞ்சுக்கு அடியில் வைத்திருக்கிற ஈர விறகை வெயில் வருகிற இடம் பார்த்து காயப்போட, கலைந்து வைத்திருக்கிறார் கேப்பையை சேலையை விரித்து கிண்ட, ஊறுகாய் ஜாடி பூசனம் பூக்காமல் வெய்யிலில் வைக்க அல்லது தோட்டத்தில் தோளுக்கு மேல் உள்ள பரணில் ஒரு கை பருத்தி மாரோ மிளகா மாரோ எடுத்துக் கொண்டு வர இப்படி நடமாடாமல் தீராது. தேங்காய் காரி வருவாள். இலந்தைப்பழம் விற்கிற பொக்குவாச்சி வருவாள். கோயில் பிரகாரம் மாதிரி பத்தில் இருந்து 12 மணி வரை கரண்டையில் சேலையோ பாவாடையோ விசிறிக் கொண்டே இருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டே தான் இருக்கும்.

தாத்தா எல்லோர் கூடவும் கல் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டே பேசுவார். கொடியில் ஈரச் சேலையை காய போடுகிற வடக்கு வீட்டுக்காரி ஆனாலும் சரி இதெல்லாம் எனக்குப் பிடிக்காது என்கிற மாதிரி உச்சியில் எண்ணெய் வைத்து கொண்டை போட்ட தலையோடு கழுநித் தண்ணியை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு போகிற மேல் வீட்டு மூத்த மருமகள் ஆனாலும் சரி பேச்சு கொடுக்காமல் இருந்ததில்லை.

வயது குறையக்குறைய தாத்தா நிறைய மரியாதை கொடுத்து பேசுவார். போலியான மரியாதை. பேத்தி முறையிலுள்ள சின்ன பிள்ளையை அக்கா என்று கூப்பிடுவார். கொழுந்தியாள் முறையும் கூடுதல் வயதுடைய குஞ்சம்மாளை இவர் வழியில் இன்னொரு கிளை வழி எல்லாம் சொல்லி கேட்டியா அதனால நீ எனக்கு பேத்தியா முறை என்பார்.

இந்தப் பேச்செல்லாம் இடையில் இடையில் நடக்கும். மற்ற பொழுதில் பேப்பரை வரி விடாமல் படித்து முடித்தாகும். வெள்ளைக்காரன்-தாத்தா சொல்கிற மாதிரி சொன்னால் பிரிட்டிஷ் - காலத்து அரசியல் செய்தியும் ரொம்ப தள்ளி பாடப்புத்தகங்களுக்குள் போன பிறகும்கூட இன்னும் ஏதோ ஒரு புள்ளி அளவில் செய்தித்தாள்கள் உடன் தாத்தாவுக்கு சம்பந்தம் இருக்கிறது. இந்த பேப்பர் படித்து முடிக்கிறதற்குள்ளேயே தாத்தாவுக்கு தபால்காரர் ஞாபகம் வந்துவிடும். கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை தெரு வாசலை ஏறிட்டு ஏறிட்டுப் பார்க்க ஆரம்பித்து விடுவார். தபால்காரர் வந்தவுடன் எல்லாத்தையும் கையில் வாங்கிக்கொண்டு உள்ளே வந்து விடுவார்.

தபால்காரர் யார் என்றாலும் இந்த வீட்டு எண்ணும் விலாசதாரும் மனப்பாடம் ஆகி இருக்கும் அளவுக்கு தினசரி இரண்டு வேளையும் எங்கள் வீட்டுக்கு அப்பா பெயருக்கு பத்திரிகைகள் வரும்.

அதுவும் அப்பாவுக்கு வருகிற இந்த பத்திரிக்கைகளை மற்றவர்கள் பத்திரிக்கை என்று ஒருநாளும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஒரு அயல் நாட்டின் செய்தி ஸ்தாபன வெளியீடுகள் அவை. எல்லாம் அந்த தேசம் சம்பந்தப்பட்டதாகையால் வழக்கமாக தொடர்கதைகள் வாசிக்கிற யாரும் அதை பிரித்து கூட படிப்பது இல்லை. ஒரு பக்கத்தில் மட்டும் அச்சடித்த தாள்களுடைய பத்திரிக்கை ஒன்று கணிசமான பக்கங்களுடன் தினமும் வரும். அப்புறம் முன்னால் சொன்ன விஷயங்கள் அடங்கிய பத்திரிக்கை இரண்டு வாரங்களுக்கு ஒன்று. இதைவிட கெட்டியும் அற்புதமும் நிறைந்த தாள் கட்டுமானத்துடன் மாதம் ஒருமுறை ஒன்று. பத்திரிக்கை போலவே மிக கச்சிதமான அளவுடன் அது அனுப்பப்படுகிற காக்கி உரைகளும் சுற்றத்தாள்களும் கூட இருக்கும்

தாத்தாவை தவிர இதற்கு எப்போதாவது ஒரு அதிகப்படியான வாசகன் உண்டு என்றால் அது நான் தான் சில குறிப்பிட்ட தினங்களில் அது வெளியிடுகிற வாராந்தர மலர்களில் இதுவரை நான் படித்தறியாத மென்மையுடன் கூடிய கதைகள் மொழிபெயர்ப்பு ஆகிக் கொண்டிருந்தது.

தாத்தாவின் சம வயதுடைய நண்பர்கள் இல்லாத குறையை மறைக்கிற வகையில்தான் தாத்தா அவருடைய காலத்து பொருட்களை இன்னும் தன்னைச் சுற்றி இருக்க பண்ணுவது என்று முடிவு செய்திருக்க வேண்டும்.

இந்த பழைய வீட்டை நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாகரிகம் ஆக்குகிறது போல கொத்தி பூசி சிறு சிறு மாறுதல்கள் உண்டாக்கி பொருட்களை இடம் மாற்றி வைத்தாலும் அவருடைய அறையில் அந்த காலத்து ஜாடையை மாற்ற முடியவில்லை. தாத்தாவுக்கு அதிகப்படியான நியமமும் ஒழுங்கும் உண்டு. தாத்தா தன்னுடைய பாஸ் முகத்தில் அடிக்கும் படியான ஆங்கிலத்தில் பேசி தன்னுடைய வேலையை புறக்கணிப்பதில் வருத்தப்படாது வெளியேறி விட்டதை நிறைய தடவை பெருமையாக வர்ணித்தாலும் கூட தாத்தாவால் அவரின் அந்த பாஸ் அலுவலகத்து ஒழுங்குகளை விளக்கி விட முடியவில்லை.

ஒரு வட்டமான கருங்காலி மேஜையும் நாற்காலியும் தாத்தாவின் ரூமில் இருக்கிறது. அது வட்டம் தான் என்றாலும் அப்படி ஒரு வட்டத்தை இப்போதுள்ள தச்சா சாரிகள் கொண்டு வந்துவிட முடியாது லேசில். அந்த மேஜையில் ஒரு பழைய மை கூடு இருக்கும். கவிழ்த்தினால் கீழே சிந்தாத அந்த மைக்கூடு இப்போது உபயோகம் இல்லை. அப்புறம் ஒரு பித்தளை தம்ளர். கீழிருந்து மேலே வரை தகடு போல வண்டிக்கு பின் முகப்பில் மயில் கொடி என்று அலங்காரம் பண்ணுவது மாதிரி வேலைப்பாடு இருக்கும். அதில் தான் தற்சமயம் கூட பளபளப்பு குறையாத காக்கி பித்தான்கள் ஊசி நூல் பழைய பாக்கிள்கள் பேனா கட்டை நிப்புகள் பென்சில் பேனா களில் பொருத்தி கொள்கிற குப்பிகள் எல்லாம் இருக்கும். மிகவும் திடகாத்திரமான மது புட்டிகள் இரண்டு. ஆகாய நீலத்தில் சின்னஞ்சிறு சென்ட் கூப்பி ஒன்று.

ஒரு நேர்த்தியான கருப்பு பஞ்சிங் மெஷின் எல்லாம் பார்க்கையில் தாத்தாவின் அலுவலக மேஜையில் ஒரு அந்தரங்க நகல் இது என்று தோன்றும்.

தாத்தாவின் உத்தியோக வயது சினேகிதர்கள் நாலைந்து பேர் எடுத்த சிபியா கலர் புகைப்படம் ஒன்றும் சுவரில் உண்டு. தாத்தா அட்டணை கால்போட்டு இருப்பதுடன் ஒரு கையில் வைத்திருந்த பிரம்பும் ஒன்று வைத்திருப்பதன் காரணம் தெரியவில்லை. தாத்தா ஒரு எஸ்டேட்டில் வேலையாக இருந்தார் என்பதால் குதிரைகளின் முதுகையும் அறிந்திருக்கவேண்டும். தாத்தா குதிரையுடன் இருக்கிற படம் எதுவும் இல்லை. ஆட்சியுடன் இருக்கிற படம் நடு வீட்டுப் பட்டாசலில் மாட்டி இருக்கிறதால் இங்கு ஒன்றும் இல்லை. ஊஞ்சலாடுகிறது ஒரு பெண் -அது ரவிவர்மா ஓவியம் என்பது பின்னால்தான் தெரியும் -படமும் ஒரு சோப்பு விளம்பரத்திற்காக அந்த காலத்திலேயே வெளியிட்டிருந்த ஒரு லேடியின் படமும் சற்று அதிகமான பெரிய அளவிலேயே இருக்கிறது.

தாத்தா இப்படி தினசரி வருகிற இந்த தபால்களை எல்லாம் சேகரிப்பதற்கு என்று அளவு வாரியாக இரண்டு தபால் பைகளை தன்னுடைய கோட் ஸ்டாண்டில் தொங்க விட்டிருப்பார். கோட் ஸ்டாண்டில் படுக்கை வசத்தில்தான் தோல்வார் சுற்றப்பட்ட தாத்தாவின் வாக்கிங் ஸ்டிக் இருக்கும் அது ஒருபோதும் கீழே விழாமலும் அசங்காமலும் தாத்தா தினசரி அந்த இரண்டு பைகளை உபயோகித்து கொண்டுதான் இருக்கிறார். வரிசைக்கிரமமாக அன்றைக்கு வரவர தேதி பிசகாமல் எல்லாவற்றையும் படித்து விட்டு தபாளின் மடிப்பு எல்லாம் சரி பண்ணி முழு சைஸ் பேப்பராக ஒரு பையிலும் அப்புறம் பத்திரிக்கையாக துண்டு பிரசுரங்களாக வருகிற விஷயங்களை இன்னொரு பையிலும் வைத்திருப்பார். இந்த தபால்களை வைத்து அனுப்பப்படுகிற காக்கி உறைகள் எல்லாம் ஐந்து விரல்கள் போன்ற -சற்று துறுவேறின- பழைய தகற கிளிப்பில் மாட்டி ஒரு பக்கத்தில் வைத்திருப்பார். புகையிலை மடக்கி பொட்டலம் போட்டு வைத்துக் கொள்வது போக வேனில் காலத்தில் நாங்களெல்லாம் ஆற்றுக்கு குளிக்கப் போகையில் பல்பொடி மடக்கி கொடுக்க பிரயாணங்கள் என்று அயலூருக்கு தயாராகும்போது சாப்பாட்டுப் பொட்டலங்கள் மடக்க எல்லாம் அந்த பைகளே உபயோகப்பட்டு வருகிறது.

ஆச்சி கூட இந்த ரூமுக்குள் கிட்டமுட்ட நுழைந்து இருப்பாள் என்று தோன்றவில்லை.

தாத்தா ஒவ்வொரு வருஷமும் பொங்கல் அன்றைக்கு ஒவ்வொரு ரூபாய் எல்லோருக்கும் கொடுப்பார். தாத்தா கொடுக்கிறவராய் இந்த வயதிலும் இருப்பதில் ஆச்சிக்கு சந்தோஷமும் பெருமையும் உண்டு ஒவ்வொருவராக ஆச்சி எங்கள் பெயரைச் சொல்லி கூப்பிட்டு நீ தாத்தாகிட்ட பொங்கல்படி வாங்கியாச்சா என்று கேட்டுக் கொள்வாள். பொங்கல் அன்றைக்கு மட்டுமல்ல.

சமயாசமயத்தில் சொல்லாமல் கொள்ளாமல் தாத்தா அபூர்வமான தின்பண்டங்கள் வாங்கி வருவார். நச நசவென்று ஒன்றோடொன்று ஒட்டுகிற பிசுபிசுப்பு இல்லாத பேரீச்சம்பழங்கள் கிடைக்கிற இடம் தாத்தாவுக்கு அன்றி வேறு யாருக்கும் தெரிந்ததில்லை. ஒரு தடவை கண்ணாடி கண்ணாடியாய் சிங்கின சீனா கற்கண்டு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார் இந்தப் பக்கத்தில் இல்லாம ரொம்ப அரிதாக கிடைக்கிற அண்டி மாம்பழங்கள் சப்போட்டா பழங்கள் எல்லாம் உண்ணுவதற்கு பழக்கியது தாத்தா தான்

தாத்தா இல்லாவிடில் இந்தப் பழங்களை எல்லாம் சமீபத்தில் மட்டுமே அறிந்து இருக்க எங்களுக்கு முடிந்திருக்கும்.

இவை விலைக்கு வாங்கப்படுகிற விஷயங்கள் என்பதும், தாத்தாவுக்கு செலவழிக்க பணம் உண்டு என்பதும் எல்லாம் ஆச்சி இறந்த சமயம் தான் எங்களுக்கு தெரிந்தது. ஆச்சி இறந்தபிறகு அதிகம் செலவழித்ததில்லை. ஆச்சி தாத்தாவுடன் எவ்வளவு தூரம் ஒட்டாதது போல் தூர இருந்தே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாளோ அவ்வளவு தூரம் அன்யோன்யமாகவும் இருந்து விட்டுப் போயிருக்கிறாள். தாத்தா தன்னுடைய மகனிடம் கூட செலவுக்கு வாங்கக்கூடாது என்ற அக்கறையுடன் ஆச்சிதான் தன்னுடைய கையிலிருந்து கொடுத்து வந்திருப்பாள் போலிருக்கிறது. இப்போதும்கூட ஆச்சி இருக்கிற ஞாபகத்தில் அடகுவைக்க முந்தானைக்குள் நகையை பொத்தி வைத்துக் கொண்டு ரஸ்த்தா வேலம்மாக்காவோ, மாணிக்கத்துப் பெரியம்மையோ இன்னும் யாராவது ஒருத்தர் வந்து அம்மாவின் சலிப்பான அல்லது சில சமயம் வேடிக்கையான பதில்களைக் கேட்டு விட்டுப் போகிறார்கள். தாத்தாவுக்காகவே ஆச்சி அந்த அடகு பிடிக்கிற சிரமத்தையும் ஏற்றிருக்க வேண்டும்.

தாத்தா ஆச்சியிடம் போய் துட்டு வேணும் என்று நிற்கிறதை பார்த்தது யாரும் இல்லை. இதை உங்க தாத்தா கிட்ட கொடு என்று ஆச்சி எங்கள் மூலமாக ரூபாய் கொடுத்ததும் நடந்ததில்லை. ஆனாலும் தாத்தாவின் கை நிறைந்திருக்கும் படியாக ஆச்சி நடந்து வந்து இருக்கிறாள். அவுகளுக்கு என்ன மைனர்னு நினைப்பு. போத்தி கிளப் காப்பி இல்லாவிட்டால் காலையில தொண்டை நனைஞ்சாப்ல இருக்காது என்பதை எல்லாம் அவள் மிகுந்த சந்தோசமுடனேயே சொல்லி இருக்கிறாள்.

ஆச்சி இறந்த பிறகு தாத்தா காலையில் கிளப்பிற்கு போகிறதில்லை என்று தெரிந்துவிட்டது. சட்டென்று தொழுவத்து வேலைகளில் பசு சம்பந்தப்பட்ட விஷயங்களிலேயே தாத்தா ரொம்ப நேரத்தை ஒதுக்க ஆரம்பித்துவிட்டார். இதற்கு முன்னாலும் மாட்டை தாத்தா தான் கவனித்து என்றாலும் இப்போது ஏதோ ஒரு கூடுதலான ஒட்டுதல் இருக்கிறது தொழுவிலும் பால் மாட்டில் கன்றுக்குட்டியில் எல்லாம்.

தாத்தா தானாகவே மாட்டுக்கு தண்ணீர் வைக்க தொட்டி சேர்த்தது ஆச்சி இறந்த சொற்ப நாளில் தான். ரொம்பவும் நேர்த்தியான மர தொட்டி அது. இப்போதெல்லாம் அது மாதிரி எவனுக்கும் செய்ய வராது தடுக்கு தடுக்குப் பலகைகளாய் வசம் பார்த்து தாத்தாவே பத்து இருபது துண்டு இழைத்து ஒன்று சேர்த்து பட்டை அடித்து ஒவ்வொரு கட்டையின் இடுக்கிலும் ஊறவைத்த வாழை நாரை கொடுத்து இண்டு இடுக்கெல்லாம் அடைத்து அதற்கு மேல் மஞ்சனத்தி மெழுகு தேய்த்து ஒரு சொட்டு தண்ணீர் கூட கசிந்து பார்த்ததில்லை அதில்

மாட்டுக்கு கம்பளி கயிறு, வெண்சங்கு, ஊதா பாசி, நார்த்தங்காய் மணி எல்லாம் வாங்கி கட்டினார். இப்படி பள்ளிவாசல் பக்கமாய் போலீஸ் ஸ்டேசன் வழியாய் போனால் ஆஸ்பத்திரி வரும் அதற்கு சைடில் குஷ்டரோகி வார்டுக்கு போகிற வாசல் கதவு இருக்கும். அதற்குப் பக்கத்திலே இரும்பு எல்லாம் போட்டு வைத்திருப்பான் அதில் ஏதாவது சங்கிலி இருக்குதான்னு மார்க்கெட்டுக்குப் போய்விட்டு வரும்போது பார்த்துகிட்டே வா. ஏதாவது அமையும் என்று தாத்தாவைப் போலவே மாடுகளிடம் தன் பகுதிநேர வாழ்க்கையை ஒப்படைத்திருக்கிற வடக்கு வளவு சித்தப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தது ஒருநாள் கேட்டது.

தாத்தாவின் எல்லா நடவடிக்கைகளிலும் அளவுக்கு அதிகமாக தன்னை வருத்திக் கொள்வது தெரிந்தது. பசிக்கிறது தட்டை எடுத்து வை என்று தாத்தா இதுவரை சொன்னதில்லை. இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டது கிடையாது. அம்மா அடுப்படியில் ஏதாவது வேலையாய் இருந்துவிட்டால் வைத்துவிட்டு கைகழுவி போனதில் இருந்தே வந்துவிட்டது

இத்தனைக்கும் இடையில் தாத்தா வெற்றிலை போடுவது புகையிலை போடுவதையும் நிறுத்தி விடவில்லை. அங்குவிலாஸ் புகையிலையும் வெற்றிலையும் சுண்ணாம்பும் தாத்தாவிடம் எப்போது கேட்டாலும் கிடைக்கவே செய்தது. ஆனால் அது அப்பா இங்கே வேலையாக இருந்து கொண்டே இங்கிலீஷ் பேப்பர் படித்து இருந்த சமயத்தில்தான்.

இங்கிலீஷ் பேப்பர் எல்லாம் தாத்தா ரூமில்தான் கீழே அறையில் ஒரு பக்கம் கெட்டியான அட்டை விரித்து அதற்குமேல் தேதிவாரியாக வரிசையாக இருக்கும். தாத்தாவைப் போல் யாராலும் அப்படி ஒன்னு போல் அடிக்க முடியாது. இப்போது போலவே இங்கிலீஷ் பேப்பருக்கு பழைய பேப்பர்காரனிடம் நல்ல விலை அப்போதும் பேப்பரின் நிறை எல்லாம் சேர் வீசை கணக்கில். அப்பா வேறு ஊருக்கு ஆச்சி சொல்கிற மாதிரி சொன்னால் ஒசந்த வேலைக்கு போன பிறகு இங்கிலீஷ் பேப்பர் வருவது நின்று போயிற்று. தாத்தாவும் இங்கிலீஷ் பேப்பர் வாசிக்கக்கூடியவர்தான். தாத்தா பேப்பரை ஏன் நிறுத்தியது என்று கேட்கவில்லை. ஆனால் வெற்றிலை பாக்கு போடுவதை நிறுத்திவிட்டு கொஞ்ச நாளாக புகையிலை மாத்திரம் வாயில் ஒதுக்கிக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறார் என்று தெரிந்தது. எப்போவாவது மண் பானையில் இருந்து கோரி குடிக்கும்போது தாத்தா இந்த தம்ளர்ல்ல தண்ணி குடிச்சாரா என்று எங்களில் ஒருத்தர் கேட்டிருக்கிறோம். என்னை பொறுத்தவரை புகையிலை வாடையில் ஒருவித விருப்பம் இருந்தது. அப்புறம் பார்த்தால் புகையிலை போடுவதை என் தாத்தா நிறுத்திவிட்டார். இந்த வாசலுக்கு வியாபாரத்திற்கு எப்போதாவது வரும் போது தாத்தாவிடம் சந்தோசமாக வாங்கிப் போட்டிருக்கிறார் கருத்த முதலியார். அன்றைக்கு ஒருநாள் சேலை கட்டி ரூபாயை மடியில் வைத்துக் கொண்டு ரூபாய்தான் ஒரேடியாக புரட்சியே கருத்தை முதலில் தொட்டு கொஞ்சம் நம்மகிட்ட நிக்கட்டுமா நினைச்சுட்டியா போல என்று சந்தோசமாக சொல்லியபடி தாத்தாவிடம் புகையிலை கேட்டபோது தாத்தா அதையெல்லாம் விட்டாச்சு என்று சொன்னதும் தான் இந்த விவரம் எங்களுக்கு தெரிந்தது

அனேகமாக இந்த சமயத்தில்தான் தாத்தாவுக்கு ஒரு வினோதமான குணம் வந்தது வாசலில் எந்த பிச்சைக்காரன் வந்தாலும் அவனை அர்த்தமில்லாமல் விரட்டி நடக்க வெளியே தள்ள ஆரம்பித்தார் தாத்தா இந்த வாசல் மத்தியில் உள்ள கல்லில் உட்கார்ந்து கொண்டு பிரியம் அற்றவராக நடந்து கொண்டு வருவது ரொம்பவும் சங்கடமாக இருந்தது எனக்கு ஒரே பயமா இருக்கு என்று அம்மா தாத்தா இப்படி சத்தம் போடுவது பற்றி சொன்னால் ஒரு தடவை இதே உட்கார்ந்து கொண்டுதான் எங்களுக்கெல்லாம் முழுப் பரீட்சை லீவு விட்டு இருந்த ஒரு சமயத்தில் வாசலுக்கு வந்த ஒரு பாம்புப் பிடாரன் விளையாட்டு காட்ட சொன்னார் ரொம்பவும் உயர்ந்த மனதுடன் அவனுடைய பாம்பையும் மகுடி வாசிப்பையும் எல்லாம் பாராட்டிவிட்டு வேலைக்கார பிள்ளையை விட்டு கடைக்குப் போய் இரண்டு முட்டை வாங்கிக் கொண்டு வரச்சொல்லி பொறுத்துக்கொள் என்று காரணம் சொன்னார் சாப்பிட்டு போ என்று தாத்தா சொன்னது தான் தாமதம்

ஆட்சி வெங்கல கும்பா நிறைய பழைய சோறை புரிந்து கொண்டு வந்து போட்டாள் கன்னங்கரேலென்று முட்டையும் வாழையிலையில் பழைய சோற்றை பிடாரன் சாப்பிடும் போது அவன் நாசியில் நீர் வடிந்து கொண்டிருந்தது இப்போதும் ஞாபகம் இருக்கிறது கையை உள்ளுக்குள் கொடுத்து பொம்மலாட்டம் செய்துகொண்டும் பாட்டும் பாடுகிறார் ஒருத்தன் வரும் போது அவனிடமிருந்து அந்த பொம்மையை வாங்கி தன் கை விரல்களை நுழைத்து பொருத்திக் கொண்டு அவனை மாதிரியே பாட்டு பாடி எங்களை எல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த தாத்தா இப்போது எதற்கு வாசலுக்கு வருகிறார் பக்கிரிகள் இடம் கூட எரிந்து விழுகிறார் என்று தெரியவில்லை

போன் பண்ணா போடா சொல்றது தெரியலையா என்று ஒரு குழுவைப் பையனையும் முறுக்கு வரை கொண்டு தள்ளிவிட்டது எல்லாம் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது

சிட்டிசன் மணி அடித்துக்கொண்டு வீட்டு எஜமான் பெயரைச் சொல்லி நட்சத்திரம் சொல்லுங்க என்று கிரீடமும் வெள்ளைப் பாவாடையும் ஆக நிற்கையில் போதும் போதும் மாசிமாதம் போட்ட கையெழுத்து சுகத்திலேயே இருக்கு ரெண்டு மாசம் முழுசா ஆகல அதுக்குள்ள என்ன கொள்ளை போகுது என்று அர்த்தம் இல்லாமல் சத்தம் போடுகிற போது எங்களுக்கு தான் பயமாக இருந்தது ஏற்கனவே பயமாக இருக்கிற சித்தே சன் ராப்பாடி எல்லோரையும் தாத்தா கோபிக்க பண்ணி அவன் வார்த்தை பிசகாய் ஏதாவது சாபம் சொல்லிவிட்டால் அம்மாவுக்கு இந்த மாதிரி யோசனையெல்லாம் போகும் அடுப்படியில் இருந்து புலம்புவாள் வேலையற்று தன்னை போல இருக்கிற எல்லோரையும் வெறுக்கிற குணமாக இது எப்போது மாறியது என்று தெரியவில்லை மூக்குப்பொடி புகையிலை விரைவாகவும் அதிக தடவை அதிக நாட்கள் உபயோகத்திற்கு வருவதாகவும் தோன்றி பக்கத்து வீட்டு மனை அல்லது வாசலில் விளையாட வருகிறார் பையன் இடமும் வாங்கி வரச்சொல்லி ஆரம்பிக்கும்போது என்றுதான் தோன்றுகிறது தாத்தாவுக்கு கண்களில் பார்வை மறைய ஆரம்பித்தது

தெரு வாசலில் நடைபெறும் போதே அருமையாக உள்ளது ஐயா என்று வருகிற ஆட்களுக்கு தக்க இங்கிருந்தே வரவேற்றவர் இப்போது வெறுமனே வாங்க என்று மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்கிறார் சில சமயம் இதைக்கூட பாதி தூரம் வந்தவுடன் ஒரு மாதிரி கஷ்டப்பட்டு சிரித்துக்கொண்டு சொல்கிறார் ஒரு உத்தேசமான அடையாளம் கண்டு தான் வரவேற்பது தப்பிதம் ஆகி தான் யூகித்த முகம் இன்னொரு முதலீடு செய்யப்படுவதன் சிக்கலான நேரங்களில் தாத்தாவுக்கு அடிக்கடி வந்தன

மச மச வென்று பூச்சி பறந்து எதிராளி முகமெல்லாம் சிந்தனா தண்ணீராய் சிஸ்டம் போலும் வெளிச்சத்தின் அனுசரணை தக்கபடி மாற ஆரம்பித்த போது அப்பா வந்து ஒரு சின்ன ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்ய தாத்தா அதை இப்படி வாதமாக மறுத்த போது தான் அப்பா ரொம்பவும் கோபப்படாதே நாங்கள் பார்த்தது அந்த அதிகப்படியான கோபத்திலும் கூட அப்பா நிறைய வார்த்தைகள் தாத்தாவைப் பார்த்து சிதர விடவில்லை குறைவாகவே சொன்னார் ரொம்பவும் அவமதிக்கப்பட்டு விட்டது போன்ற ஒரு முகத்துடன் பின்னே எப்படியும் போங்க என்று மட்டும் தாத்தாவைப் பார்த்து அப்பா சொன்னார்

தாத்தாவின் கண்ணாடிக் கூடு எப்போதும் உபயோகம் இல்லாமல் உள்ளே ரூமில் உள்ள வட்ட மேஜை யிலேயே இருந்தாலும் தாத்தா தினசரி வாசல்களில் வந்து உட்கார்ந்து தபால்காரன் இடம் அப்பாவின் பெயருக்கு இன்னமும் வந்து கொண்டிருக்கிறார் அந்த தூதரக செய்திகளை வாங்கிக் கொண்டிருந்தார் தபால்காரர் அவற்றை நீட்டிக்கொண்டு லெட்டர் இருக்கா என்று கேட்க அதற்கு வீட்டு அம்மாவுக்கு பதில் சொல்ல திரும்ப இரண்டு விரற்கடை தூரம் தபாலில் இருந்து விலகி வயதான யானையின் தும்பிக்கை போல தாத்தாவின் சுருக்கம் நிறைந்த விரல்கள் காற்றில் துழாவித் துழாவி வாங்க விரும்பிய நேரத்தில் அதிர்ச்சியுடன் இதை உணர்ந்த தபால்காரர் இந்தாங்க என்று கையைத் தூக்கி அவரு மடியில இயக்கங்களை வைத்தார் தினசரி மடியில் வைத்து செல்வதற்கு ஒன்றும் சொல்லவில்லை அவரிடம்

தாத்தா முன்னைப் போல இப்போது சவரம் செய்து கொள்வது கூட இல்லை சினிமாக்களில் நாலுபக்கமும் இருந்து நாலு பேரு ஒருத்தனை அமைக்க பிடிப்பது போல தாத்தாவின் தோற்றம் சகல பக்கங்களிலும் பிடிபட்டு அடங்கிக் கொண்டிருந்தது சவரம் செய்யாமல் உன் கண்ணில் பிழை சாடியும் பழைய வேட்டி கிழிந்த வெள்ளைத்துணியில் மூக்குப் பொடியைத் வைத்துக்கொள்வதும் என்று தாத்தாவின் தோற்றமே ஒரு மாறிப்போய்விட்டது பெருமாள் கோயிலில் உட்கார்ந்து கொண்டு போலி அதிரசம் விற்றவர் வெயிலுக்கு இங்கு வந்து உட்கார்ந்தது போலிருந்தது வயதான முகத்தில் சவரம் செய்யாத ஒரே காரணத்தால் இவ்வளவு காலத்துக்கு இடமாகி விட்டது

வெட்கப்படாமல் மறைத்துக் கொள்கிறார் வுக்கு பார்வை தரம் இல்லை என்று தாத்தா வாய்விட்டுச் சொல்லுவார் என்று யாரும் எதிர்பார்க்க விட்டாலும் சமீபகாலமாக இழப்பினால் சவரம் செய்து கொள்ளாமல் இருக்கலாம் என்று நினைத்தோம் தாத்தாவின் என்றும் பளபளப்பான சவரக்கத்தி இன் ஓரங்களில் துருப்பிடிக்க முடியும் என்று யார் எதிர்பார்த்தார்கள் ஒரு பெரிய தீப்பெட்டி மாதிரியான அமைப்புடைய டப்பாவில் தாத்தா வைத்திருந்த சவரக்கத்தி சொட்டு மருந்து போல் தேங்காய் எண்ணெய் விழும்படி வைத்திருந்த சீசா இதையெல்லாம் விட கத்தி திட்டுவதற்கு வைத்திருந்த கண்ணாடிதான் அபூர்வமானது வீடு கட்ட சுண்ணாம்பும் மணலும் அழைத்து அழைத்து தேய்ந்துபோன அம்மி மாதிரி உறுதியான கண்ணாடியில் செய்யப்பட்டிருந்த அதில் தாப்பா சவரக்கத்தியை புரட்டிக் கொண்டே ஜன்னல் பக்கமாக வந்து ஜன்னல் கம்பியில் நிழலும் வெளியேற மர நிழலும் அவர் மேல் விழுந்து விழுந்து விடுவது போன்ற நேரம் இனி கிடையாது யாருக்கும்

அக்காவின் குழந்தைக்கு வீட்டில் வைத்து வெட்டி விட்டுப்போக வந்த பார்பர் யாரென்று தெரிந்ததும் தன்னுடைய நாற்காலியை தானே வெளியே எடுத்துப் போட்டுவிட்டு இங்க வாடி என்று உட்கார்ந்து கொள்ள மட்டும் செய்தார் அதற்கப்புறம் இதுவரை அவன் தான் வீட்டுக்கு வந்து விட்டுப் போகிறான் தாத்தாவின் முகத்தை பார்க்க கஷ்டப்பட்டுதான் நாங்களாக ஒவ்வொரு தடவையும் அவனை கூப்பிட்டு வந்திருப்பேனே ஒழிய காலத்தின் தேவையை சொன்னது கிடையாது

தாத்தாவுக்கு பார்வை மங்கி சுவர்கள் கதவுகள் ஜன்னல் விளிம்புகளில் ஓரமாகவே ஒரு மூஞ்சூறு நடமாடுவது போல நடனம் ஆட ஆரம்பித்ததும் எல்லா கோபமும் சுயவிருப்பம் போய் ஒரு அமைதி வந்து விட்டிருந்தது இந்த பயங்கரமான அமைதிக்கு முன்னால் கடைசியாக அந்த மாடு இறந்ததற்காக தான் தாத்தா ரொம்ப சங்கடப்பட்டார் அன்றைக்கு ராத்திரி போல அதிக பரபரப்பும் சோகமும் இயலாமையும் அடைந்த நாள் இருக்காது எந்த சினை மாட்டின் இரு காலமும் தாமே கழியும் ஒரு தாதி பிரசவம் பார்ப்பது போல பசுமை நிறைந்த பார்த்துக்கொள்வார்

பசுவைப் பற்றி அதுவும் சினைப் பசுவைப் பற்றி தாத்தாவுக்கு அனைத்தும் தெரியும் மாடு விடுவதில் இருந்து பிட்டி இறங்குவது ஏற்றும் முறை அடிப்பது கால் மாற்றி தொலைவில் நிலை கொள்ளாதது போல் கிடைக்காதது எல்லாம் பார்த்து இன்றைக்கு ராத்திரி கூட இனி வரும் என்று தயாராகிவிடுவார் நாட்டுப்புற வாசலில் புரட்டிப்போட்டுவிட்டு இருக்கிற கல்லுரலில் கட்டிவிட்டு அரிக்கேன் லைட்டை ஏற்றிக்கொண்டு ஒரு துண்டை எடுத்து கொடியில் போட்டபடி புறவாசல் வந்து உட்கார்ந்து விடுவார் அப்படி உட்காரும்போதே நீங்க எல்லோரும் லைட்டை அனைத்து விட்டு போய் படுங்க என்பார் ஆனால் அவர் படுக்க மாட்டார்

அரிக்கேன் லைட் வெளிச்சத்தில் ராத்திரி முழுவதும் வெற்றிலை போட்டுக் கொண்டே உட்கார்ந்திருப்பார் கொட்டைப்பாக்கு அடிக்கிற சத்தம் தொப்புதுறை சத்தம் வாய் கொப்பளிக்க சத்தம் மாடுகள் மாதிரி சத்தம் வீட்டுக்குள் கைப்பிள்ளை அழுகிற சத்தம் மாத்திரம் கேட்கும் வேப்பமரமும் வாசகமாக புறவாசல் முழுவதும் பறந்து வரும் நட்சத்திரம் எல்லாம் திரண்டு நிற்கும் படுக்கிறது நெருக்கமாக இருந்த பசு இதற்குள் ஈன ஆரம்பித்திருக்கும் தலையையும் கால்களையும் பனிக்குடத்தை கில்லி இழுத்து ஏந்தி வாங்கி வைக்கோலில் போடுவார் மாடு இயக்கிக் கொண்டு நக்கிக் கொடுக்க ஆரம்பித்ததும் சட்டியில் வைத்து நிலைமாற்ற முன் வைத்துவிட்டு மறுபடியும் வெற்றிலை போட ஆரம்பிப்பார் காலையில் நாங்கள் முடித்து வரும்போது கன்றுக்குட்டி இழந்து தாயின் கழுத்தில் மடியை தேடியபடி நிற்கும்

இந்தத் தடவை தாத்தாவுக்கு முடியவில்லை தாத்தா இதை ஒட்டின வருத்தத்தில் மற்றவர்களிடமும் தானாகவும் பேசினதை வைத்துப்பார்த்தால் வழி ஒன்னும் தெரியல முழிச்சு பார்க்க பார்க்க ரெண்டு கண்ணுலயும் வட்டம் வட்டமாக இது பிசின் மாதிரி போகுது பசலி பழத்தை உள்ளங்கையில் வைத்து ரசிக்கிற மாதிரி சகலமும் நசுங்கிப் போய் தெரியுது இந்த அரிக்கேன் லைட் இருக்கே அது உதவுமான்னு பிரிய யுத்தத்தினால் வெளிச்சம் சாமி கொண்டாடி சந்தனம் பூசியது மாதிரி கைக்கை தூக்கிகிட்டு ஆடுது என்று தன் சிரமம் பற்றியும் மாடு ஏற்கனவே மழை தண்ணி இல்லாத காட்டில் நின்றுவிட்டு பலம் குறைந்து போய் வந்து இருக்கு பார்க்கிறதுக்கு ஒரு குளிர்ச்சியே இல்லை அது கிட்ட ஒன்றும் சரியில்லையே சரி இல்லையே ன்னு மனசுக்குள்ள தொங்கிக்கிட்டு இருந்தது கடைசியில் அது போலவே ஆகிவிட்டது என்று பசுவின் நிலைமையைப் பற்றிச் சொல்லியிருந்தார்

கன்று குட்டி போட்ட பிறகு பழகினால் சேண்டி தள்ளி காக்காய் கூப்பிடுகிற நேரத்துக்கு மாட்டின் சுருங்காமல் நின்றுவிட்டது நடத்திய மாடு போல தலையை அண்ணாந்து இருக்க கடித்த வைக்கோல் வாயில் அப்படியே நீட்டிக்கொண்டிருந்தது அப்புறம்தான் தாத்தாவுக்கு ஒரு அமைதியும் இருக்கும் வந்துவிட்டது மேஜையும் நாற்காலியும் நகர்த்தி விட்டு கட்டிலை அந்த ரூமில் போட சம்மதம் கொடுத்தார் புழங்கி வந்த எல்லா வாசல்களின் கதவுகளும் ஒவ்வொன்றாக அடைபட்டு இந்த அறையுடன் கடைசியாக முடிந்தது போல அந்த கட்டிலுடன் கட்டில் ஆகிவிட்டார்

இப்படிப் படுத்துக் கொண்டாலும் அந்த தபால்காரர் எதிர்பார்க்கிற குணமும் தபால் வரவில்லையா என்ற கேள்வியும் தாத்தாவிடம் இருந்தன இரண்டு மூன்று நாட்களாக அம்மா வந்து தொடர்ந்து தபாலை வாங்கவும் போஸ்ட்மேன் பெரியய்யா எங்கே என்று கேட்டு இருக்கிறார் அம்மா விவரம் சொன்னதும் பெரியம்மா போனதே ஐயாவை குறுக்கிட்டது என்று சொல்லிவிட்டு தாத்தா வழக்கமாக உட்காரும் வாசலைப் பார்த்துக் கொண்டே நின்றாராம் அம்மா சொல்லும்போதே கழுத்தைத் திருப்பி நின்று காட்டினால் இருக்கத்தான் செய்யும் தாத்தாவுக்கும் தபால்காரர் இருக்கும் எத்தனை வருஷம் பழக்கம்

முதலில் கொஞ்ச நாளைக்கு சரியாக அந்த செய்தி தபால் எல்லாம் தாத்தாவிடம் போய் சேர்ந்தன சிலசமயம் தாத்தாவின் தலைமாட்டில் வலது பக்கத்திலோ வைக்கப்பட்டன தாத்தாவிடம் கொண்டு வந்து எல்லாவற்றையும் எல்லோரும் கொடுக்க முடியவில்லை சில வாசல் படியிலேயே கிடந்தன அவை அனைத்தும் அனேகமாக அம்மா வாங்கியவை

என் கையில் கிடைத்த சிலவற்றை புரட்டு கையில்தான் அதில் கதை கவிதைகள் கூட வருவது தெரிந்தது என்ன கிழமை இட்ட இதழ்கள் ஒரு சிறு கதையுடன் கடைசிப் பக்கங்களில் வெளியாகும் என்பது பழகி விட்டதால் அந்த பைல்களை நேரடியாக நான் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன் இதேபோல இந்த செய்தி ஸ்தாபனத்தின் இன்னொரு வெளியீடு ஒரு பக்கத்தில் மட்டும் அச்சிடப் பட்டிருக்கிறது என்றும் கூட ஒரு நல்ல பேப்பராக அது இருக்கிறது என்றும் பெண்கள் பத்திரிகைகளில் வருகிறது பண்ணி வைத்துக் கொள்ள அது மிகுதியும் உதவுகிறது என்று தங்கச்சி சொன்னாள்

சாப்பாடு அனுப்பும் போது அப்பளம் அனுப்ப வசதியாக இருக்கிறது என்று காகித உரையை சில சமயங்களில் அம்மா எடுத்துக்கொண்டால் இப்படி ஆளுக்குக் கொஞ்சமாக எடுத்துக் கொண்டால் தாத்தா கைது என்ன போய்ச்சேரும் பக்கத்து வீட்டு மாமியிடம் சொல்லி தாத்தா தை கடையில் போட்டால் என்ன கிடைக்கும் தாத்தா பொடி மட்டுமாவது போட வேண்டும் என்று தோன்றியபோது தான் வீட்டுக்கு சந்தாவாக வருகிற அந்த பிரதிகள் பக்கமே நான் போகாமல் என்னை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று மேலும் ஆயுதங்களை விட தாத்தாவின் நிறைய அதிகம் அல்லவா

Comments

Popular posts from this blog

நாவல் வாசிப்பு