சிறுகதை நிறை
வீட்டுக்குச் சந்தாவாக அனுப்பப்படுகிறது என்றால் அதை நீங்கள் படிக்கலாமே- அதன் அபூர்வமான கதைகளுக்காக கவிதைகளுக்காக. 'வீட்டிற்கு வருகிறதுதான். ஆனால் நான் படிக்கிறதில்லை. புரட்டுவதுகூட கிடையாது. அது வருகிறது தபாலில் என்பதெல்லாம் என் மாதமிருமுறை ஞாபகத்தில் இப்போது இல்லை'. ஜோதி கேட்டதற்கு நான் இப்படித்தான் பதில் சொல்ல முடிந்தது. அந்த புத்தகத்தின் பழைய இதழ்களில் நிறைய விஷயங்களை எப்போதும் மறப்பதற்கில்லை. அது காட்டுகின்ற சந்தோசமான முகங்கள் செழுமையாயும் ஆரோக்கியமும் மிக்க அந்த தேசத்து ஆண் பெண்களின் புன்னகைகள் அவர்களின் பாரம்பரிய உடையிலும் முடி அலங்காரத்துடனும் ஆடுகிற நடனங்கள். அழுத்தமும் திறமையும் ஆக அச்சிடப்பட்டு இருக்கிற அவர்களின் நீர்வண்ண தைல வண்ண ஓவியங்கள் மரச் செதுக்கல்கள்.பீங்கான் வேலைப்பாடுகள். எல்லாவற்றிலும் கூடுதலாக அதிகம் ரசிக்கிற அவர்களின் கதைகளின் மனுஷர்கள். நீங்கள் படிக்கவில்லை என்றால் அது யாரிடம் போகும்? வீட்டில் வேறு யாராவது படிப்பார்களா அல்லது மாதாமாதம் பேப்பர்காரனுக்குத்தானா? மேலும் ஜோதியை கேட்டதில் ஒரு உண்மை இருந்தது. அது பேப்பர்காரன் இடம் தான் மாதாமாதம் போகிறத...